சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் […]
Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. […]
கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிப்பு. நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் […]
தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலை மறைவு சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று […]
சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி, 10 பேர் காயம். ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் குன்றிலிருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று(செப் 25) இரவு 8:30 மணியளவில் என்ஹெச்305 இல் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகளின் வாகனத்தில் 17 பேர் சென்றுள்ளனர். அதில் 7 பேர் பலியான நிலையில் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குல்லுவில் […]
சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த சமயத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது, தொற்று பரவல் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு […]
வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா […]
உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை […]
தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவில் பல்வேறு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். தாய்லாந்து நாட்டில் உள்ள லோப்புரிக்கு சுற்றுலா பயணிகளின் அதிகமான வருகைக்கு காரணமாக இருப்பது அங்கிருக்கும் குரங்குகள். இதனால் இந்த குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் குரங்கு திருவிழா என்பது நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. தற்போது இந்த குரங்கு திருவிழா லோப்புரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் […]
விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பலரும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்புவது வழக்கம் தான். ஆனால் எங்கு செல்வது? நீங்கள் இந்த மாதம் உங்கள் விடுமுறையை கழிக்க வேண்டும் என விரும்பினால், மும்பைக்கு பயணம் செய்யலாம். செப்டம்பர் மாதத்தில் மும்பையை சுற்றிப் பார்ப்பதற்கான பல இடங்கள் உள்ளது. இந்த மழை காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு செல்ல கூடிய புதுமண தம்பதிகள் அல்லது குடும்பத்தினர் யாராக இருந்தாலு,ம் நிச்சயம் மும்பையில் உள்ள இந்த 5 இடங்களுக்கும் […]
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றன. எனவே மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. […]
குஜராத்திலுள்ள டாங் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான சபுடரா பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரக்கூடிய பயணிகள் அங்குள்ள இயற்கையை ரசிக்கும் பொழுது அங்குள்ள விலங்குகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகில் நின்று அதிக அளவில் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செல்பி எடுப்பது அபாயகரமானதாக இருக்கும் […]
கொரோனா வைரஸால்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 190 நாட்கள் மூடப்பட்ட பின்னர், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21, அன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக 5,000 சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் அதிகபட்சமாக 2,500 பேர் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ) […]
புதிய ஆண்டு இன்று பிறந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை ,தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை நான்கு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது .ஏற்கனவே கருப்பானதி , அடவி நயினார் கோவில் அணை மற்றும் குண்டாறு அணை ஆகியவை நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தற்போது குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க […]
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்து இருந்தது. குறிப்பாக நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்து இருந்தது. இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பபெற்றது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் மேலும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவ நிகழந்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், […]