சென்னை : தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில் “தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்” எனும் திட்டத்தையும் அதற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று துவக்கி வைத்துள்ளார். மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள் TrekTamilnadu.com எனும் தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் மலையேற முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் […]
சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால், இங்கு எப்போது வெள்ளம் வருவது என சொல்ல முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த காரணமாக, கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், […]
சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு […]
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதி வேந்தன் சுற்றுலா துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக சுற்றுலா பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார். பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், […]
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள். மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை […]
புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த கடற்கரை திருவிழாவில் கடற்சார்ந்த விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகவே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சுற்றுலாத்துறைக்கு சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சுகாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் சுற்றுலாத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார். அதன்படி, சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உத்தரவாதம் இன்றி ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும், சுற்றுலா நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உத்தரவாதம் இன்றி வழங்கப்படும் என்றும், சர்வதேச பயணங்கள் […]
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுற்றுலாவிற்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வரலாம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று […]
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும் வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, […]