பசுமையான சுற்றுசுழலுக்காக டோரன்ட் கேஸ் நிறுவனத்தின் 25 CNG நிலையங்களை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். Torrent Gas நிறுவனத்தால் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் இயற்கை எரிவாயு விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள CITY GATE நிலையம் (MOTHER STATION) மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 CNG நிலையங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், […]