69-வது ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் டோனி-ஆன் சிங் வென்றுள்ளார். பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். 69-வது உலக அழகி போட்டி லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி துவங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் 40 பேரை தேர்வு செய்யப்பட்டது. பின்னர் உலக அழகி […]