ஜப்பான் நாட்டில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், ஹனடே ஏர்போர்ட்டில் இறங்கியபோது பயங்கரமாக தீப்பிடித்தது. பயணிகள் விமானமான ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) தரையிரங்கும்போது, ஹனடே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதில், முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமான விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அந்த […]
மத்திய ஜப்பானில் இன்று 6.1 ரிக்டர் அளவில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த அதிர்வு டோக்கியோ மற்றும் ஜப்பானின் சில நகரங்கள் வரையிலும் உணரப்பட்டுள்ளது, சுனாமி குறித்த எந்தவித எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் மாலை 5:09 மணிக்கு ஜப்பானின் மத்திய மீ மாகாணத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் (217 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புகுஷிமா அணுமின் நிலையங்களில் சேதம் அல்லது […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தார். ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.2020 இல் உடல்நலக் காரணங்களால் பதவியில் இருந்து விலகினார் ஷின்சோ அபே ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோவில் அபேக்கு அரசு இறுதிச் சடங்கை பிரம்மாண்டமாக நடத்துகிறது, இதில் உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டு […]
இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பின்போது,கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டது என பிரதமர் மோடியை ஜோ பைடன் […]
இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது,கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”முதலில்,நான் (ஆஸ்திரேலிய) பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பதவியேற்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் […]
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில்,ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி,தனி விமானம் மூலம் இன்று அதிகாலை டோக்கியோ சென்றடைந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்ற நிலையில்,அவருக்கு ஜப்பான் வாழ் இந்திய […]
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்,ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 23) மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் டோக்கியோ செல்கிறார்.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை (மே 23 ஆம் தேதி) ஜப்பானின் […]
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்கவுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவை வரும் ஆகஸ்ட் 8 அன்று புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சனிக்கிழமை […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, ஒலிம்பிக் […]
ஜப்பானின் டோக்கியோவில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் இன்று காலை 08:14 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 407 கி.மீ வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றார். இதுவரை 2 வீராங்கனைகள் உள்பட 6 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா மாநிலம் மைனா என்ற கிராமத்தை சேர்ந்த 23 வயதான அமித் பங்காலின். இவரது சகோதரர் அஜய் மூலம்தான் குத்துச்சண்டை அமித்துக்கு பரீட்சையமானது. இதையடுத்து குத்துசண்டை அவரது அண்ணனின் கனவு என்று கூறுகிறார். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். […]