தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று கூடியுள்ளது. இன்று ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அதே போல அதிமுக தரப்பின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….
வடதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த பின்னர், அடுத்து தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத சூழல் நிலவுகிறது . இரு மாவட்ட மக்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், […]