ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.அதன் விவரங்களை காண்போம். ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்று அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும்,இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவின் மின்சார வாகன புரட்சி இன்று தொடங்குகிறது! ஓலா ஸ்கூட்டருக்கு முன்பதிவு இப்போது ஆரம்பமாகிறது! மின்சார வாகன உற்பத்தியில் உலகத் தலைவராவதற்கு இந்தியாவுக்கு ஆற்றல் உள்ளது.எனவே,இதனை வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்”,என்று பதிவிட்டுள்ளார். முன்பதிவு: இதனால்,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை […]
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் […]
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்துள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 […]
சென்னையில்,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.71-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.88.62-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த நிலையில்,தற்போது அவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. […]
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தின் முதல் தொகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை இன்று காலை 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய […]
சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை நாளான இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வளர்பிரையன்று வரும் திருதியை நாளே அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக,இந்த நாளில் மக்கள் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். ஏனெனில்,அட்சயம் என்றால் குறையாது,தேயாது மற்றும் வளர்தல் என்று பொருள்.எனவேதான்,இந்நாளில் அதிக விலையுர்ந்த பொருட்களை மக்கள் வாங்குவர். அவ்வாறு,விலையுயர்ந்த பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்க முடியவில்லை எனில்,எல்லோரும் எளிதில் வாங்க […]
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலமானார். முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்றுநோயால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து,சிகிச்சை பெற்று ஓ.பாலமுருகன் நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு […]
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது. நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர் […]
தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,26), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம். பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் […]
தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,21), பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய். 84.21 , டீசல் லிட்டருக்கு ரூபாய் 76.85 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், […]
அனைத்து தரப்பு உயிரினங்களையும் காக்க நினைவூட்ட கொண்டாடப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று. இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது பூமியில் வாழும் பலதரப்பட்ட உயிரினங்கள் ஆகும். இந்த தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம் எனப்படும். எனவே தான் இந்த பலதரப்பட்ட உயிரினங்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஒன்வொரு மே மாதமும் 22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள […]
ஆண்டுதோறும் மே மாதம் 18 ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவை குறித்து மக்களுக்கு உணர்த்துகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம். இந்நாளில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடர்ந்து, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் […]
கவிஞர் கவிஞாயிறு தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள் துரைசாமி – புஷ்பம் அம்மாள்.இவரின் துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும், நமது தமிழ் […]
சேவை என்பது இந்த உலகில் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து அந்த தேவையை பூர்த்தி செய்வதே சேவை ஆகும். அந்த சிறப்பான பணியை உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற அமைப்பின் பெய்ர் ரெட் கிராஸ் என்ன்னும் செஞ்சிலுவை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ரெட் கிராஸ் அமைப்பின் வரலாற்றை அறிவேம். 1859ம் ஆண்டு […]
இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் .சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் […]
2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி (இன்று ) தெரியும் என நாசா அறிவித்திருந்தது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இது ஓநாய் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் கடைசியில் சூரிய கிரகணம் டிசம்பர் 26 அன்று நிகழ்ந்தது. அடுத்த 2031-ல் மே மாதம் தெரியவரும் என நாசா அறிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் […]
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குசாவடிகளில் ஏற்பட்ட சம்பவத்தால் இரண்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மறுவாக்குப் பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட தேர்தலின் போது, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் […]
நாடு முழுவதும் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற உள்ளது.அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. துர்க்கை பூஜை அக்டோபர் 3-ஆம் தேதியும் , சரஸ்வதி பூஜை 7-ம் தேதியும் , விஜயதசமி 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியை வட இந்தியாவில் துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் போது பழங்கள் , பொறி , நாட்டு சர்க்கரை அவல் , கடலை போன்றவை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.மேலும் […]
+2 வகுப்புக்கான செய்முறைத்தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் , புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10,+1,+2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்க இருக்கின்றது.இந்த தேர்வு மார்ச் 29-ம் தேதி முடிவடையும்.இந்நிலையில் இன்று +2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு_க்கான செய்முறை தேர்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது.இந்தநிலையில் இந்த செய்முறை தேர்வை 7 லட்சத்த்து […]