தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3,552 சீருடைப் பணியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது.அதன்படி,இரண்டாம் நிலைக் காவலர்,சிறைக் காவலர்,தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து,https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,முதல் முறையாக தமிழ் மொழி தகுதித் தேர்வை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு […]
தமிழகத்தில் 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 2022-ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. மேலும், பிற்பகலில் முதல் முறையாக தமிழ் […]
எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு ( Sub Inspector ) விண்ணப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காவல் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். […]
கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி மாவட்ட, நகர காவல்துறைக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடிதம். ஜூன் கடைசி வாரம் காவல்துறையில் ஆள்சேர்ப்பு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், போட்டியாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி மாவட்ட, நகர காவல்துறைக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு 8,888 பணியிடங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டது.எனவே 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி 8,826 பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வாகி இருப்பதால் முறைகேடு நடந்து இருப்பதாக புகார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 26-ம் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,140 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம். http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் 2018 ஜனவரி 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.