Tag: TNTransport

கிறிஸ்துமஸ் – 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

#Chennai 2 Min Read
Default Image

அலட்சியம் வேண்டாம்! ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு!

பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாய் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை. ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. இதனால் மா.போ.கழக […]

#Conductors 6 Min Read
Default Image

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை. தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். […]

- 3 Min Read
Default Image

#JustNow: குரூப் 4 தேர்வு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தேர்வர்களுக்கான நடைமுறைகள் வெளியீடு!

குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. அதாவது, தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழக முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத […]

#TNGovt 5 Min Read
Default Image

#Breaking:ஓட்டுநர்களுகளே…இனி இதை தாண்டி பேருந்தை நிறுத்தக் கூடாது – போக்குவரத்துத்துறை போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமப்படுகிறார்கள் எனவும்,பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும்,சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது எனவும் கூறி […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை

‘உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை. அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துறை டெண்டரில் சைவ உணவகங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துறையின் செயல்பாடு ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் சைவ உணவு என்ற […]

#hotel 4 Min Read
Default Image

அரசு பஸ் ஸ்டிரைக் தொடரும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ […]

#Strike 3 Min Read
Default Image

போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு.!

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்கள் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன்மூலம் பணபலன்கள் பெற முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image