அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம். தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. தமிழ்நாட்டில் கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் கூறினார்.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயில் […]
தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில் மற்றும் சங்கரன் கோயில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது […]
அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்களை நியமனம் செய்ய ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுவிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற போவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிருந்தார். இந்த நிலையில், 48 முதுநிலை திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் […]
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு. தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி […]
ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பேட்டி. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழகத்தில் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம், ஆனால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என […]
கோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் […]
திருக்கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என அறிவிப்பு. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் நம்முடைய பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ளார் அறிவிப்பில், தமிழகத்திலுள்ள திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பனவாகவும், பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சிற்பங்கள், கற்றளிகள் நம் கட்டிட கலைக்கு பெரும் எடுத்துக்காட்டுகளாகவும், நமது பண்டைய நாகரீகத்தின் சின்னங்களாகவும், உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமும் அமையப் […]
தமிழக்கதில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக,இன்று முதல் இரவு நேர ஊரடங்கு(இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி,வார இறுதி நாட்களான […]
திருப்பதிக்கு இணையாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உருவாக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கடந்த காலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை இந்து இந்துசமய அறநிலையத்துறை எடுத்துள்ளது என்றும் கோயில்களின் மேம்பாட்டுக்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட […]
திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் பொங்கல் கருணை கொடை ரூ.1000 வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 2019-2020-ம் ஆண்டு 240 நாட்கள், அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கும், ஆறு மாதம் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு […]