தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,சென்னையில் ரூ.52.28 கோடிக்கும்,திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும் மதுப் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.மேலும்,சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி,கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக என்று சொல்லவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதில். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வாசித்தார். அதில், 2021-22-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் கடந்தாண்டை விட நடப்பாண்டில் […]