பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என தமிழக அரசு தகவல். உக்ரைன் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர யாரும் உக்ரைன் செல்லவில்லை எனவும் கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் […]
சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று UGC உத்தரவு. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவிட்டது. சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. […]
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் […]
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடர்நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளில் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தாகவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினி என்பது பல காலமாக கனவாகவே இருந்து வந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் மூலம்,பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,மூவலூர் […]
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா […]
நான் தமிழக முதல்வராக வரவில்லை! உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன் என கல்லூரி கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் […]
மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தல். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதோடு, சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு, பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும், மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், மருத்துவக் […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு. 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு அளிக்க உத்தரவு. 10 ஆம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,செய்முறைத் […]
சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை […]
ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் […]
ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த 5 மாணவர்களையும் அமைச்சர் மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோரில் 1,800 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர […]
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி […]
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என பள்ளிக்கல்வித்துறை தகவல். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், […]