மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]
10,11,12 பொதுத்தேர்வு அட்டவணையை இன்று மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தரவை சந்திக்கவுள்ள 10 மற்றும் 12-ஆம் […]