குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]
நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைப்பு. நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’17/2022, நாள் 28.07.2022-ல் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு வழித் தேர்வு 12.11.2022 (மு.ப மற்றும் […]
குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,413 காலி பணியிடங்களுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு டந்த மே மாதம் 21ம் தேதி நடத்தியிருந்தது. இதுபோன்று 7,138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இந்த சமயத்தில், குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் […]
IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு (அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) நடைபெறும் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவம்பர் 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் விரிவான அட்டவணை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் […]
உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிப்பு. உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்.19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு. ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு நவ.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறையை சேர்ந்த ஸ்ரீநிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தற்காலிக அடிப்படையிலான உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பணி நியமனத்தை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என அரசு அறிவிப்பு. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, இனி அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்பணி நியமனத்தை மேற்கொள்ளும் என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய காலத்தேவை, தற்போது ஏற்பட்டுள்ள சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப, மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் […]
குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்.30ல் நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் […]
TNPSC தேர்வுக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான நாள் 18.07.2022 விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட […]
டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற Group I முதன்மைத் தேர்வு முடிவுகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. […]
5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பானை தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல், […]
ஆவின் தொடர்பான கருத்துக்காக அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்துள்ளார். கோவை ஆவின் நிறுவனத்தின் ஆய்வுக்குப் பிறகு,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்:”அண்ணாமலை,தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் ரவுடிதான் என்பதுபோல அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி […]
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புழல் உதவி சிறை அதிகாரி ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 10ம் வகுப்புவரை தமிழிலும், 11, 12ம் வகுப்பை கேரளாவில் ஆங்கில வழி கல்வியில் படித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்திருத்தம் தங்களை போன்றோரின் அடிப்படை […]
குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகள் குறித்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி 2021-ல் நடந்த குரூப் 1 தேர்வில் 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகளில் 60 விடைகள் தவறாக இருந்ததை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே அமைத்த குழு ஒரு கேள்விக்கான […]
தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( […]
குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு […]
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என TNPSC தலைவர் தகவல். தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் […]
இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக புகார். தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதினர். Group 2 / 2A தேர்வுக்கு இந்த முறை ஆண்களை விட பெண்கள் […]
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி […]