தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]
அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டள்ளது. 2015-ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து TNPSC தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக உண்மை தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை […]
டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது. 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட […]
குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவித்துள்ளது. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி […]
2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என 3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் புயல்.! […]
பிப்ரவரி 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80% க்கு மேல் நிறைவடைந்துள்ளது என்றும், டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான […]
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. வடசென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மதியம் நடைபெறவிருக்கின்ற தேர்வுக்கான கேள்வித்தாள் ஆனது காலையிலேயே விநியோகிக்கப்பட்டதால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கூறுகையில், இந்த தேர்வை நடத்துவது சென்னை உயர் நீதிமன்றம். அவர்கள் தயார் செய்த கேள்வித்தாள்களை தான் எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் அதை தேர்வர்களுக்கு வினியோகம் செய்தோம். இதில் எங்களுடைய தவறு எதுவும் […]
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ் பல்வேறு அரசு துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்படுகிறது. இந்த நிலையில், GROUP VII-A தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 9 முதல்நிலை நிர்வாக அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 9 […]
டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு என அறிவிப்பு. குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் […]
முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது, டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த […]
நவம்பர் மாதம் குருப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும். – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையமான டிஎன்பிஎஸ்சி , தமிழக அரசு காலிப்பணியிடங்களில் பெரும்பாலான பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது . அந்த வகையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு அட்டவணை குறிப்பிடப்படாமல் இருந்தது. தற்போது , குரூப் 1 தேர்வு உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் நவம்பர் […]
அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் என விசிக தலைவர் கருத்து. குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை 2023 நவம்பரில் வெளியிட்டால் தேர்வு 2024-ல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வு எழுத தயாராகி வந்தனர். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்திட்டம் போட்டி […]
காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை. அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]
டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அழிப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் தொடுத்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் குரூப் டி தேர்வில் நிரப்பட்பட்ட 7382 பணியிடங்களில் அரசு தெரிவித்த கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு […]
முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல். குரூப்-2, 2A முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை, டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே 21-ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வெளியானது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது […]
தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கி .நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவது, 1080 இடங்களில் பிற்பகல் 12:30 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப்-1 முதல் நிலை […]
டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி. டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.