சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC ) நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே தற்பொழுது வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. குரூப் 1 தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் 2.38 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்த […]