டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் , காவலர் சித்தாண்டியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு […]
தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைக்கு தகுதி தேர்வாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மொழித்தாளுக்கு மாறாக பொது அறிவு வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,268 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கியது. குரூப் 2 முதல் நிலை தேர்வானது காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 248 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]