தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து அரசாணை வெளியீடு. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS-ஐ நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFS-ஐ நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் போது, முல்லைப்பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கும், பெரியாறு அணை முகாம், தேக்கடி […]
சென்னையில் 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே தொடக்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். சுமார் 3.42 கோடி மதிப்பில் மொத்தம் 25 மின் வாகனங்கள் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, […]
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கான ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம். சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் புதிதாக அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் புதிய சுற்றுச்சூழல் […]