மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான நேரம் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 பெரும் […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் […]
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராக வட்டு எறிதல் வீராங்கனை ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரிக்கப்பட்ட நிலையில்,நிதியுதவி அளித்தார்கள் என்பதற்காக விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் ஆகியோரை நியமிக்கக்கூடாது என்றும்,மாறாக விளையாட்டு சங்க நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் .இது தொடர்பாக சட்டம் வகுக்கும் வரை நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தனிநீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு […]