பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 13 கிராம மக்களின் கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் உதயநிதிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வசம் இருந்த பல்வேறு துறைகள் ஒதுக்கீடு. சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உதயநிதி அறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் என பெயர் பலகை […]
தமிழக அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பின்னர் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 7ம் தேதி தமிழக புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 33 அமைச்சர்கள் […]
அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து, அதிகாரிகள் வெளியே சென்ற பிறகு அமைச்சர்களுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் தனியாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் […]
அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்று. உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவிற்கு […]