தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், பிப்ரவரி 1-ஆம் தேதி […]