தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி […]
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில்,வழக்கினை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் […]
பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 335 பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி […]
பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு […]
விருதுநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. […]
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதிவுகளுக்கு மறைமுக தேர்தலை ரத்து. – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. அதே போல சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ஆளும் அதிமுக கட்சியை விட திமுக கட்சி சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்ததது. இதில் மாவட்ட ஊராட்சி […]
மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல். 10,306 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது. 27 […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ராமநாதபுரத்தில் ஊராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களை சத்தியம் செய்ய சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பதவிகளுக்காகான தேர்தல் முடிவடைந்து, இந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரியக்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பெண்கள் போட்டியிட்டனர். அதில் ஒரு பெண் மட்டும் வென்றுள்ளார். […]
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இதில் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளும் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழபுலியூர் சிலோன் காலனியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளைச்சாமி என்பவர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட செல்வராஜ் […]
27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி விட்டன. இதில் ஊரக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு எதிராக சுயேட்சையாக நின்று டிடிவி.தினகரன் வெற்றிபெற்றார். அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலின் போது அமமுக எனும் கட்சியை தொடங்கி களமிறங்கினார். அதில் எந்த தொகுதியிலும் […]
வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் எந்த பாரபட்சமுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக 10 வாக்குகள் மட்டுமே பெற்று ராஜலக்ஷ்மி என்பவர் வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 28 மணிநேரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி […]
தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான சேவூரில் திமுக பிரமுகர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 27 மணிநேரத்தினையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த தமிழக அறநிலையத்துறை […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன. தனசேகர் என்பவர் தனது இருமனைவிகளையும் இரு ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றிபெற வைத்துள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரசிய சம்பவங்கள் […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன. நீலகிரி, திருச்சி, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நீலகிரி, திருச்சி, […]
தமிழக்தில் 27 மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி கிருஷ்ணகிரி மாவட்டமத்தில் கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் […]
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் செல்வி செங்குங்குட்டுவன் வெற்றிபெற்றார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி ஆவார். தமிழகத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தற்போது வேகவேகமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த சோபனா ராஜி வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சாந்தி […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் உள்ளே புகுந்ததால் அங்கிருந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் […]