சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7) சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவில் பரவி தற்போது தமிழகத்திலும் பரவியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள், என பலரும் பேரவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ள ஆளுநர் ரவி தனது உரையை முதலில் ஆங்கிலத்தில் படிப்பார். அதை தொடர்ந்து அதன் தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முக்கியமாக பேசப்படும் என […]
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். கடந்த ஜனவரி 3ஆம் தேதி சபாநாயகர் மு. அப்பாவுவும், சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசனும் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து முறைப்படி சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, வருகை தரவுள்ள ஆளுநர் ரவி தனது உரையை முதலில் ஆங்கிலத்தில் படிப்பார். அதை தொடர்ந்து அதன் தமிழ் மொழியாக்கத்தை […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார். துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். […]
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்(2022-23 ஆம் ஆண்டுக்கான) கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக,மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்,தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் […]
திமுக கட்சிக்கும்,ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகனை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். தமிழக சட்டப் பேரவையில் பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது: மகிழ்ச்சிக்குரியது,பெருமைக்குரியது: “சட்டப் பேரவையில் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையை அத்ததுறையின் அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.நீர்வளத்துறையின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளவரும், திமுகவின் பொதுச்செயலாளராகவும்,இந்த அவையின் முன்னவராகவும்,எனது மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அண்ணன் துரைமுருகன் அவர்களது […]