வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சற்றுமுன் தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் இருப்போர் இந்த முகாமிற்கு சென்று பயன்பெறலாம். ஏற்கனவே, டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன் […]
சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது […]
தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை. அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த தொகைக்கு கூடுதலாக வசூலித்தால் தமிழ்நாடு அரசுக்கு புகார் தெரிவிக்கலாம். கடந்த கல்வியாண்டில் பல சுயநிதிக் […]
ஏற்பாடு சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மருத்துவத்துறை அமைச்சர். தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்பட கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என ஆய்வு செய்யும் வகையிலும், அதேபோல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் பருவ கால காய்ச்சலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த […]
வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு. தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வாரம் […]
காய்ச்சல் தொடர்பாக நாளை தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்துள்ளது. பாரு நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது என அறிவித்தார். சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு சென்று […]
தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா என்ற HIN1 காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். HIN1 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அரசு மருத்துவமனையிலும், 215 பேருக்கு தனியா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பதற்றமடையும் சூழல் இல்லை, குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் முகக்கவசம் அணிய […]
ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. குரங்கம்மை நோய் குறித்து யூகங்களுக்கு […]
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் […]
தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி […]
தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் […]
கொரோனா பரவல் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை என கூறியுள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்கள் […]
குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக […]
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை […]
அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல். தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் சீராமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. […]
சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதம் 109 பேரில் ஒருசிலருக்கு இனைநோய் பிரச்சனைகள் உள்ளன என்றும் கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தகவல். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான […]
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா […]
டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது […]
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது என ராதாகிருஷ்ணன் தகவல். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது. தொடர்ந்து, மாஸ்க் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 24 […]