அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். அப்போது,விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில்,திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 […]