கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது […]