பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ரூ.2.17 கோடி செலவில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களில் ரூ.2 கோடி நிதி உதவியில் கணினிமயமாக்கப்படும். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.