Tag: tngov

#Breaking: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் தொடர் ஊடரங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.  பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு நாளை (23.3.2020) காலை […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

நாளை ஒயின்ஷாப் மூடப்படும் – தமிழக அரசு உத்தரவு.!

உலக முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த […]

closed tomorrow 3 Min Read
Default Image

வரும் 1ம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். 

Minister Kamaraj 2 Min Read
Default Image

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் – முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு.!

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் என்றும் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.  மேலும் 15 மாவட்டங்களில் […]

CMedapadiKpalanisami 4 Min Read
Default Image

காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் – தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு.!

கொரோனா எதிரொலியால், தலைமை செயலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்றும்  ஊழியர்கள் கைகளை 20 விநாடிகள் சோப்பால் கழுவவும், வெந்நீர் பருகவும் என அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார்.  மேலும் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த கூட்டங்களை அவசியம் ஏற்படாவிடில் நடத்தக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]

CoronaAlert 2 Min Read
Default Image

கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை.!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு […]

#Fisherman 3 Min Read
Default Image

எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனீ, கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். […]

borders 2 Min Read
Default Image

வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சம் காரணமாக தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஒருவருக்கு மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image

தமிழக டாஸ்மாக் கடை மூலம் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா.?

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.28,839 கோடி வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுவிலக்கு கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2019-20 நிதியாண்டில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பீர் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் […]

#Tasmac 3 Min Read
Default Image

பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான 1948ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகள் முறையே 1983 மற்றும் 1984ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாகவும், ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்கவேண்டும் என்றும், இந்த […]

NAME BOARD 2 Min Read
Default Image

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சிக்கு ரூ.382 கோடியும், அரியலூருக்கு ரூ.347 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து. மத்திய அரசு இந்தியா முழுவதும் 2020-21-ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு மாநில அரசு  சார்பாக அறிக்கை தயார் செய்து மத்திய […]

medical college 2 Min Read
Default Image