இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழில்துறை அமைச்சர் சம்பத் சந்தித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் இருவரும் இன்று கலந்து கொள்ள உள்ளனர்.