தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்களிடம் உண்டியல் மூலம் வசூலித்த கேரள வெள்ள நிவாரண நிதி 23 லட்சத்து 8 ஆயிரத்து 292 ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வியாழனன்று நேரில் சந்தித்து வழங்கினர். செயலாளர்கள் எம்.சவுந்தரராஜன், டி.கலைச்செல்வி, ஆர்.பன்னீர்செல்வம், சி.ஆர்.ராஜ்குமார் துணைத் தலைவர்கள் எம்.ஞானதம்பி, எஸ்.தமிழ்செல்வி, எஸ்.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். DINASUVADU
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது… கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அளவிலான பயிற்சி முகாம் பெரியார்நகரில் 2 நாட்கள் நடந்து வருகின்றது. பயிற்சி முகாமுக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் இளங்கோ அறிமுக உரையாற்றினார். மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்ட […]