தமிழகத்தில் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள ஏரிகளிலும்,குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து,விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் […]
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி,2022 மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கான ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில்,ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தில் கடைசியாக 100 பேருக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு லட்சம் மின் இணைப்பு […]
திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பை முறையாக கணக்கெடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக,கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும்,பல நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த சில நாட்களாக […]
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தக்கல் முறையில் 5,000 விவசாய மின் இணைப்புகள் 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் […]