விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார். விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.லட்சுமணனும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகமும் போட்டியிட்டனர். விழுப்புரம் தொகுதியில் ஆர்.லட்சுமணன் 4462 வாக்குகளும், சி.வி.சண்முகம் 4250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார்.
திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 1157 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரனும், பாஜக சார்பில் எஸ்.வெங்கேடசனும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 3280 வாக்குகளும், எஸ்.வெங்கடேசன் 2123 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், திருவையாறு தொகுதியில் 1,157 வாக்கு வித்தியாசத்தில் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் உள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அதற்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 21 பேர் கொண்ட முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. மீதமுள்ள 4 வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக […]
எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மயய்ம் கட்சி, சமக, ஐஜேகே என சில கட்சிகளை இணைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளராக களமிறங்கிவிட்டார். மநீம சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி்யில் பாஜக, காங்கிரேஸை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் மாநில செயற்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.