அதிமுகவைப் பொறுத்தவரை,பொதுவாக தேர்தலில் இரட்டை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவருமே பார்ம் ஏ மற்றும் பார்ம் பி-யில் கையெழுத்திட வேண்டும் என்ற சூழல் உள்ளது.ஆனால்,தற்போது அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட […]
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி. அடிதடி, ரகளைகளுக்கிடையே கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றார். இதுபோன்று வெள்ளலூர் பேரூராட்சியின் துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டார். ரகளை, மோதல், போலீஸ் தடியடிக்கு இடையே கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது, திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தி […]
தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு கண்டிக்கத்தக்கது என எஸ்பி வேலுமணி ட்வீட். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மறைமுக தேர்தலின்போது இந்த கடும் மோதலில் சிலருக்கு மண்டை உடைப்பு, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது அதிமுக – திமுகவினர் இடையே கடும் மோதல். கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மறைமுக வாக்குபதிவின்போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இறுதியில் வாக்குப்பெட்டி உடைத்து தூக்கி வீசப்பட்டது. இந்த சூழலில், இன்று கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுகத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. […]
சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சியின் தலைவர் பதவியை தன் வசம்படுத்தியது அதிமுக. அதிமுக வெற்றி: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. சேலம் அருகே நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. அதன்படி, நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், வனவாசி பேரூராட்சியின் தலைவர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அதிமுக வேட்பாளர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி என்பவர் போட்டியிட்டனர். இருவரும் தலா 284 வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவித்த, சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் தனது வெற்றி பறிபோனதாகவும், திமுக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்துவிட்டு, தான் […]
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இதில் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சில இடங்களில் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ரத்தான […]
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. […]
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தவிர பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. […]
நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி, தருமபுரி: விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் […]
தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போட்டி நிலவி, வெற்றி பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – […]
தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில்,பிப்.22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து,மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை […]
நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி […]
நாளை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி பொறுப்புகளுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி, திமுக மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திராவிட முன்னேற்ற […]
கும்பகோணம்:மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக கே.சரவணன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் […]
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்.19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற, நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், […]
கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை, இனி கோவை முதலமைச்சர் முக ஸ்டாலினினி கோட்டை தான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் கூறினார். கோவை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]