#BREAKING: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு..!

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதைய விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும்  விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி … Read more

“ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே” – பார்த்திபன் ..!

மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே என பார்த்திபன் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தேர்தல் ஆணைய தகவல்களின்படி, திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன. வருகின்ற 7-ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக … Read more

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக தோல்வி.., திருமாவளவன் ..!

கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என திருமாவளவன் தெரிவித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக ,பாமக கட்சிகள் தோல்வியை தழுவின. சனாதன சக்திகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். சமூகநீதியை காப்பாற்றுவதில், மாநில உரிமைகளை காப்பாற்றுவதில் முழுவீழ்ச்சில் மு.க ஸ்டாலின் பணியாற்றுவார். … Read more

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல்..!

தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன்காரணமாக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களை கோட்டையாக மாற்றிய திமுக..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக  கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகின்ற 7-ஆம் தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், திமுக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும், … Read more

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் – ஸ்டாலின் ..!

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் மு.க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக முக ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் … Read more

#BREAKING: முதல்வராக 7-ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..!

திமுக  சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின்  பதவியேற்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியை 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின்  பதவியேற்கிறார். நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் முறைப்படி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக … Read more

தேர்தலில் வெற்றி.., தாயாரிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். முன்னாள் முதல்வர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லம் சென்று தாயிடம் வாழ்த்து பெற்றதையடுத்து அறிவாலயம் சென்றார் மு க ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு … Read more

#BREAKING :விராலிமலையில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி ..!

விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளராக பழனியப்பனை விட 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மு.க. ஸ்டாலினுக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து !

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், திமுக 159 தொகுதிகளிலும், அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் முதல்வராகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, … Read more