தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் […]
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிகவித்துறை திட்டம். பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த 79,762 பேரில் 8,588 பேர் எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே […]
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தொழிற்கல்வி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றில் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக பதிவேற்ற வேண்டும் என்றும் மதிப்பெண் விவரங்களை மே 14-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் […]
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி […]
தமிழகத்தில் செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது. மாணவர்கள் கை […]
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ,ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டதை தெடர்ந்து, சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 9 […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் சமீப காலமாக ஆன்லைன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பிரத்தியேக […]
கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனிடையே இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே மாணவர்கள் தேர்ச்சி தான். கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி 21 நாள்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதால் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்தது. ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் […]
5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை […]