தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி இருந்து 24ம் தேதி வரை தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 24,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் இருந்ததாக 17,398 வழக்குகள் பதிவாகியுள்ளன.