திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், கடந்த […]
தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் […]
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஏற்கனவே உள்ள இரவுநேர ஊரடங்கு நேரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால், தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து திங்கட்கிழமை […]
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,37,711 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,789 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 59 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,317 […]
தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,750 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 53 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
இரவிலும், ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடு இருப்பதால் மக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார பாதிப்புகள் பெரிதாக இருக்காது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை போதுமானதாவையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தவும், நிலைமை தற்போது இயல்பாக இல்லை என உணர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் […]
அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தேர்வுகளையும் ஆன்லைனில் […]
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஆதரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று 2,579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 8,89,490 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,083 பேருக்கு தொற்று உறுதியானது. […]
தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 8,86,673 பேர் இதுவரை பாதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 2,000க்கு மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,86,673 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை […]
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு காலம் நிறைவடைவதையொட்டி, வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். சூழலுக்கு ஏற்ப கொரோனா பரவலை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவியின் கோரிக்கையை ஏற்று சைமன் உடலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஆணையிட்டுள்ளது. ஆவடி வேலங்காடு இடுகாட்டிலிருந்து பாதுகாப்புடன் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். அவர் சிகிச்சை அளித்த நபர்களிடம் இருந்து, அவருக்கு நோய் தொற்று […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தடுப்பு […]
கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குறுந்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா கொரோனா பரவல் இரண்டாவது அலை தீர்விதமாகி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று விகிதம் 2 முதல் 5 விழுக்காட்டிற்குள் பதிவாகிய சென்னை, […]
தமிழகத்தில் மீண்டும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் கொரோனாவால் […]
அரசு விடுமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியதால் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் பிரச்சார கூட்டம் மற்றும் பொது […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, நாள் ஒன்றுக்கு பாதிப்பு 1000-ஐ கடந்து வருகிறது. இதனால் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஜனவரி திறக்கப்பட்ட பள்ளிககள் மீண்டும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து, நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் […]