முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று மட்டும் சென்னையில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.