நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக […]
அக்.14ம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், 14-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் […]
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக,ஆன்லைன் தடை சட்டம்,புதிய சட்ட மசோதா,புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது,செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் […]
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை, தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின்விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது என கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. […]
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சர்கள் தங்கமணி,செல்லூர் ராஜு ,அன்பழகன் ஆகியோர் பங்கேற்கவில்லை. கொரோனா தடுப்பு […]
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே நாளை =மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.நேற்று […]
இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் .சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் […]
தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் கூடியது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளின் கொள்கை முடிவுகளை பற்றியும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிவிவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதை பற்றியும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 19 -ஆம் தேதி )காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது