கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் பாஜக நிர்வாகியாகவும், நடிகராகவும் உள்ள எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், சர்ச்சைக்குரிய பதிவை கூறியிருந்தார். இதனை எதிர்த்து, பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரானது அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. […]
திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது நிகழ்த்திய உரையின் போது இதை அவர் குறிப்பிட்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையில் பங்கேற்ற நட்டா பின்னர் சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும் போது, “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது, பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருக்கிறது, […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வேற்று மதத்தினர் (சிறுபான்மையினர்) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது. அதாவது, தீபாவளி பண்டிகையில் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் தான் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்கிறார்கள் என்று கருத்து கூறியதாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . சமூக சுற்றுச்சூழல் ஆதரவாளர் பியூஸ் […]
2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நிர்வாக வேலைகளில் தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதே போல தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட […]
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவைகளை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். அதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாகவும், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. திடீரென நிகழ்ந்த அதிமுக – பாஜக கூட்டணி முடிவு குறித்து பல்வேறு […]
இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பி இருந்தார். அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்ப தனித்தீர்மானம் கொண்டு வர இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் முக்கிய மசோதாக்களில் ஒன்று துணை வேந்தர்களை அரசின் ஒப்புதலோடு நியமிப்பது. இது தொடர்பாக […]
மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை […]
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே வைக்கப்பட்டு இருந்த பாஜக கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் போதுபாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சனை செய்து இருந்தார். இதில், மாநகராட்சி ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது. பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அமர் பிரசாத் ரெட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகினறார். நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் […]
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவானது, பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் உருவச் சிலைக்கு, மாலை அணிவித்து தனது மரியாதை செலுத்தினார். அப்போது […]
தமிழக அமைச்சர்களான தங்கம் தென்னரசு , பொன்முடி உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விசாரணை நடந்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதில் திருப்தி இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அமைச்சர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கின் மீது மீண்டும் விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் […]
தமிழகத்தில் பாஜகவினர் காவல்துறையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பெயரில் 4 மூத்த பாஜக தலைவர்கள் கொண்ட குழு நேற்று சென்னை வந்ததனர். இந்த சிறப்பு உயர்மட்ட குழுவில், கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, லோக்சபா எம்பிக்கள் சத்யபால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் சென்னை தி-நகரில் உள்ள பாஜக தலைமை […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணத்தை தமிழக பாஜகவினர் துவங்கி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல் பகுதியில் “என் மண் என் மக்கள்” நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் , குமாரபாளையம் பகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து நேற்றைய நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழக அரசு […]
தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி […]
இன்று சேலம், ஓமலூரில் அதிமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக – பாஜக கூட்டணி பற்றியும், திமுகவின் கையெழுத்து இயக்கம் பற்றியும் உரையாற்றினார். அவர் பேசுகையில், தங்கள் கொள்கையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத கட்சி என்றால் அது அதிமுக தான். கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைந்தது. அப்படி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அது […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றத்தை நிறுவிய ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் அவர் வீட்டில் இருந்து நேற்று மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் வந்து தனது அஞ்சலியை பங்காரு அடிகளாருக்கு செலுத்தினார். மற்ற முக்கிய அரசியல் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கூட்டணி முறிவு பாஜக தலைமைக்கு பேரிடியாக அமைந்தது. கணிசமான இடங்களில் வெற்றி பெற என்று நினைத்து வந்த நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இந்த கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சி தலைவர்களும் மவுனம் காத்து வந்தனர். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? அல்லது தேர்தலில் நேரத்தில் மீண்டும் ஒன்று சேருமா? […]
தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை, நீங்கள் கைகளை மாற்றுவது நல்லது என தேசிய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். தேசம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது, ஆனால் தமிழகம் இல்லை. எனவே, நீங்கள் கைகளை அதாவது (ஆட்சியை மாற்றுவது) அதாவது நல்லது என்று கூறினார். மேலும் திமுகவை “குடும்பக் கட்சி”, “D […]
ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படுகிறது என்று பொது கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு. பாஜகவில் அண்ணாமலையும், மதனும் இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுதொடர்பான காயத்ரி ரகுராம் ட்விட்டர் பதிவில், இந்த பிரச்னை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றசாட்டியுள்ளார். எனவே காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜகவில் […]