தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், […]
நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை […]
தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேஎன் நேரு அறிவிப்பு. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கேஎன் நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு […]
ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் என அமைச்சர் அறிவிப்பு. தமிழா சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், குக்கிராமங்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1346 […]
தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க விதி உள்ளது. ஒரு ஆரம்ப […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். சட்ட மசோதாவை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொடக்கத்தில் இருந்தே […]