தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ் பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சிறு, குறு […]
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மோடியின் அறிவுறுத்தலின்படி ஊடரங்கு பின்பற்றி வருகிறது. […]
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் […]
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக […]
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க […]
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் என்றும் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார். மேலும் 15 மாவட்டங்களில் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என்றும் சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும்போது செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில் 3 […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது கால்நடைத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், இலவச கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். அதில் 15 பெட்டை கோழிகளும், 10 […]
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பேசிய மன்னார்குடி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி ஒன்றியம், வடபாதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் அனுமதி பெற்று அதிக அளவு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படுவதுடன், 1200 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் தடியடி விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் தடியடிய நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, குளச்சலில் தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், தடுத்து நிறுத்திய போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறினார். மேலும் பேரணி சென்றவர்கள் […]
கடந்த 09ம் தேதி தேதி தொடங்கிய தமிழக சட்டசபை, 11ம் தேதி வரை நடந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார். உறுப்பினர் லோகநாதன் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வரும் காலத்தில் […]
தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், 5 ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறீர்கள்? எங்கே […]
தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறினார். இதையடுத்து ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்றும் 10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி […]
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது கொரோனா தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார் என முதலமைச்சர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இதற்கு பதில் கூறிய திமுக பொருளாளர் துரைமுருகன்,நாளை முதல் முக கவசம் அணிந்து தான் சட்டப்பேரவைக்கு வருவோம் […]
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் தமிழகம் முழுவதும் எப்போது விரிவுபடுத்தப்படும் என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால், ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரே நாடு […]
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து காட்டுப்பன்றிகள் விளைநிலத்திற்குள் நுழைவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து விவாதத்தில் சுற்றுச்சூழல் குறித்து திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், […]
என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் நிலவி வருவதால், தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பினார். பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டார். மேலும் பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வரும் ஏப்ரல் 1ம் […]
தமிழக சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் செய்து சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், […]
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து பேசப்பட்டனர். அப்போது பேசிய துணை முதலவர் ஓ.பன்னிர்செல்வம், கடந்த 14-ம் தேதி நடந்த படஜெட் தாக்கல் குறித்து நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆய்வு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு […]