இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு, பயிர் விளைவிக்க மானியம், வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டம் வாபஸ் , மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கூட்டணி , தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கும் புதிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025அம ஆண்டுக்கான வேளாண் படஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை நேரலையில் இந்த செய்தி […]