தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில், தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (நவ-20, புதன்) மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த […]
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]
சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ. 12,13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.
தென்மேற்கு பருவமழை : கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட் வழக்கத்தைவிட சீக்கிரமாக தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழையால், இந்த […]
அந்தமான் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது, இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. […]
சென்னை உள்ளிட்ட மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம், மணிமங்கலம் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம், மணிமங்கலம் மற்றும் முடிச்சூர், போன்ற சுற்றுவட்டாரப் […]
பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்) 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.