சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை போன்ற சூழலை, தான் கண்டதாக ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு அக்கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது. […]
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களில் உள்ள குறைபாடுகளை 3 தினங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 20.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி,கட்டுப்பாட்டு அறை பணிகள் நாள்தோறும் சிறப்பாக […]