விழுப்புரம்: விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், அம்மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி […]
TN School: தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. READ MORE – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தற்பொழுது, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இனி […]
அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் […]
தஞ்சை:பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து,தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை […]
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மாணவியின் லாவண்யாவின் இறப்பு குறித்து,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று […]
9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.27-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3-ஆம் தேதி […]
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. எனினும்,அண்மையில் பெய்த கனமழை மற்றும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு,கடந்த சில வாரங்களாகவே பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வந்தது. எனவே,மாணவர்களுக்கு அதிகப்படியான விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக,அரையாண்டு […]
நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
இந்தியாவில் 74வது சுதந்திரதின விழா, வருகிற ஆகஸ்ட் 15, வியாழன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் சில பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினத்தன்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் சுதந்திர தினத்தன்று சுதந்திர தின நிகழ்ச்சியை தவிர்த்து வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடக்க கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் […]
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்போது அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன.இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் […]