சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரியாக தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என […]