சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே கபடி போட்டி நடந்தது. அப்போது, பவுல் அட்டாக் தொடர்பாக நடுவரிடம் தமிழக வீராங்கனை புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனைகள் மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை […]
சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகள் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆன போட்டிக்காக பஞ்சாப் குருகிராமுக்கு சென்று இருக்கிறார்கள். குருகாமில் யுனிவர்சிட்டிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா யுனிவர்சிட்டி மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியின்போது நடுவர் […]
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டது. குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்), பிரவீன் குமார் (பாரா […]