தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது குரூப்-2 தேர்வில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைத்தேர்தல் பற்றியும் கூறினார். அவர் கூறுகையில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியிதான் வெற்றி பெறும் எனவும், யார் உற்றவர் யார் அற்றவர் என்பதை தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழை நன்கு கற்றவர்கள் மட்டுமே தமிழக அரசு […]