சென்னை : பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், மழைநீரை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பாமக நிறுவனம் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ளது. 6 செ.மீ மழைக்கே […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஆய்வுக்கூட முடிவுகளும் உறுதிப்படுத்தி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் தரம் குறைவான நெய் அனுப்பியதாகவும், அதனால் அந்நிறுவனம் மீது சட்டப்படி […]
சென்னை : தமிழகத்தில் உள்ள 4 ஆறுகள் மட்டுமே மிகவும் மாசடைந்த ஆறுகள் பட்டியலில் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் பிரிவு அறிவித்துள்ளது. சமூக வலைதள பக்கங்களில் பரவும் தவறான தகவல்களைக் கண்டறிந்து அதனைத் தெளிவுபடுத்தும் விதமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உண்மை கண்டறியும் பிரிவு (TN Fact Check) சமீபகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவானது இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தைக் குறிப்பிட்டு பொய்யான தகவல் என விளக்கம் குறிப்பிட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நிகழ்வில் […]
சென்னை : அரசு அல்லது மற்ற ஏனைய செய்திகள் பற்றி சில தவறான தகவல்கள் பல்வேறு சமயங்களில் சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டு விடுகிறது. அவ்வாறு பரப்பப்படும் செய்திகள் பற்றிய உண்மைத்தன்மையை கண்டறிய தமிழக அரசு ஓர் அமைப்பை உருவாகியுள்ளது. அது பற்றிய செய்தி குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் […]